சினிமா செய்திகள்

ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சினைகள் இருப்பதாக காஜல் அவர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டேன். இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். உடனே வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும்'' என்றார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை