சினிமா செய்திகள்

'தக் லைப்' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

'தக் லைப்’ படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது 'தக் லைப்'  திரைப்படம். ஏஆர் ரகுமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்தார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 'தக் லைப்' திரைப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்து விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, வையாபுரி மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த நிலையில், 'தக் லைப்' படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ மே 8 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

'எ நியூ தக் இன் டவுன் அரைவிங் ஆன்' மே 8 என போஸ்டரை வெளியிட்டனர். அதில் கருப்பு நிற கார் புழுதியை கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்ந்து வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. நடிகர் சிம்புவின் இண்டிரோ வீடியோவாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது