சினிமா செய்திகள்

மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்தநாளில் கமல் வெளியிட்ட வீடியோ!

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூறும் விதமாக நடிகர் கமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கே பாலச்சந்தர். 1965-ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், கடைசியாக பொய் என்ற படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்களாலும் திரையுலகினராலும் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே பாலச்சந்தர், 2014ம் ஆண்டு மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய நட்சத்திரங்களும் இன்றும் அவரின் திரை ஆளுமைக்கு சாட்சியாக விளங்குகின்றன.9 தேசிய விருதுகள் வென்றுள்ள கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகிப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

இவரது பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த பலரும் இன்று ராஜநடை போட்டு வருகின்றனர். இயக்குநர்கள் வஸந்த், ஹரி, சுரேஷ் கிருஷ்ணா, நடிகர்களில் ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ் என பெரும் பட்டாளமே உள்ளது. கே பாலச்சந்தரின் செல்லப் பிள்ளைகளாக வலம் வந்தவர்களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் மிக முக்கியமானவர்கள்.

இந்நிலையில், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூறும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நான் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை. என் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார் என்பதற்காக மட்டும் போற்றப்பட வேண்டியர் அல்ல. தனக்குப் பயனில்லை என்ற நிலையிலும் என்னைப்போல் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர். அந்தளவிற்கு, விடாமுயற்சியாக புதுமைகளையும், புதுமுகங்களையும் அறிமுகப்படுத்திய வேறு இயக்குநர் என் நினைவிற்கு வரவில்லை. என்னைப்போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இன்று அவருக்குப் பிறந்த நாள். எங்களுக்கு இத்துறையில் அறிவு வளர்ந்த நாள்" எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...