சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வரும் கனகா

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகா வின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தினத்தந்தி

மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகா வின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள வீடியோவில், நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.

நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்' என்று பேசி உள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்