சினிமா செய்திகள்

'கணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் ஷர்வானந்த் நடித்துள்ள 'கணம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் நடிகர் ஷர்வானந்த் நடித்துள்ள திரைப்படம் 'கணம்'. இந்த திரைப்படத்தில் அமலா அக்கினேனி, ரிது வர்மா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழில் 'கணம்' என்ற பெயரிலும் தெலுங்கில் 'ஒகே ஒகே ஜீவிதம்' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது.

நடிகர் ஷர்வானந்த் 'கணம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கடைசியாக 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் ஷர்வானந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கணம்' திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார்.

டைம் டிராவலை மையமாக கொண்டு 'கணம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் தேதியை புரோமோ டீசர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'கணம்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு