சினிமா செய்திகள்

'கனவு தொழிற்சாலை' படபெயர் மாறியது

கரூரில் உள்ள பஸ் கட்டுமான தொழிற்சாலையை கதைக்களமாக வைத்து, ‘கம்பெனி’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

தினத்தந்தி

'மழைக்காலம்' என்ற படத்தை இயக்கிய தீபன், எஸ்.தங்கராஜன் என்ற பெயரில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

"பஸ் கட்டுமான தொழிற்சாலையை கதைக்களமாகக் கொண்ட படங்கள் எதுவும் இதுவரை வரவில்லை. எனவே ரசிகர்களுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருக்கும். 4 இளைஞர்களின் லட்சிய பயணமே, படத்தின் கரு. அவர்கள் நான்கு பேரும் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றார்களா?, இல்லையா? என்பதே கதை. இந்தக் கதைக்குள் காதலும் இருக்கிறது. அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன.

'கோலி சோடா' பாண்டி, முருகேசன், புதுமுகங்கள் டெரிஸ் குமார், பிருத்வி, வலினா, காயத்ரி, சேலம் ஆர்.ஆர்.தமிழ் செல்வன், மூகாம்பிகை ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.முருகேசன், ஆர்.ஜெயச்சந்திரன், ஆர்.ஜெயா முருகேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு முதலில், 'கனவு தொழிற்சாலை' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இப்போது, 'கம்பெனி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு