சினிமா செய்திகள்

ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் 'காந்தாரா சாப்டர் 1' - படக்குழு அறிவிப்பு

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.

தினத்தந்தி

சென்னை,

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான காந்தாரா கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் 2-ம் தேதி வெளியாக உள்ள 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்