சினிமா செய்திகள்

"மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" - கங்கனா ரனாவத் சவால்

9 ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கனா ரனாவத் சவால் விடுத்து உள்ளார்.

மும்பை:

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஏற்கனவே கங்கனா ரனாவத்திற்கு சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கண்டனம் தெரிவித்து உள்ளார். தற்போது போது மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நடிகையின் அவமானகரமான அறிக்கைகளுக்கு பின்னர் அவருக்கு "மும்பையில் வாழ உரிமை இல்லை" என்று கூறி இருந்தார்.

கங்கனா ரனாவத்துக்கு எதிராக ஒரு சில கட்சியினர் போரட்டமும் நடத்தினர்.

தற்போது இதற்குப் பதில் அளித்திருக்கும் கங்கனா "மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் எனப் பலரும் அச்சுறுத்துவதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரம், செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கனா கூறியுள்ளார்.

கங்கனா தற்போது தனது சொந்த ஊரான மணாலியில் ஊரடங்கு நாட்களைக் கழித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...