சினிமா செய்திகள்

கங்கனா ரனாவத்துக்கு "பத்மஸ்ரீ" விருது: ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்

கங்கனா ரனாவத் "பத்மஸ்ரீ" விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. இந்த விருதினை 29 பெண்கள் பெற்றுக்கொண்டனர். அதில் கங்கனா ரனாவத்தும் ஒருவர் ஆவார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் கங்கனா ரனாவத், பத்மஸ்ரீ விருதினை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார். விருது பெற்றுக்கொண்ட பின் அவர் கூறியதாவது,

நான் எனது பயணத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கினேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அட்னன் சாமியின் பாடல்களைக் கேட்காதவர் யார்? என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு அவர்களுடன் பத்மஸ்ரீ விருது கிடைப்பது பெருமைக்குரிய விஷயம். என்று கங்கனா ரனாவத் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்