தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். குயின் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ள மணிகர்னிகா படத்தில் லட்சுமிபாயாக நடித்துள்ளார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.