சினிமா செய்திகள்

இதை செய்த முதல் இந்தியத் திரைப்படம்...பெருமையை பெறும் 'காந்தாரா சாப்டர் 1'

இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் பெறுகிறது .

ஏற்கனவே ரூ.800 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் வருகிற .31ம் தேதி உலககெங்கும் வெளியாகிறது. கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளதால் விரைவில் ரூ.1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து