சினிமா செய்திகள்

கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் டீசர் வெளியானது

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'சர்தார்'. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், சிம்ரன் லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். 'சர்தார்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'சர்தார்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் மூலம் படத்தில் கார்த்தி உலகத் தரம் வாய்ந்த சர்வதேச உளவாளியாக நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் ஆறு அடையாளங்களில் பல்வேறு தோற்றத்தில் வருகிறார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது