சினிமா செய்திகள்

“கார்த்திக் ராஜாவுடன் இசைப்பயணம் செய்தது, மகிழ்வான தருணங்கள்” டைரக்டர் மிஷ்கின் அனுபவம்

“கார்த்திக் ராஜாவுடன் இசைப்பயணம் செய்தது, மகிழ்வான தருணங்கள்” டைரக்டர் மிஷ்கின் அனுபவம் என கூறினார்.

தினத்தந்தி

மிஷ்கின் இயக்க, ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கின. இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இவருடைய இசை பற்றி டைரக்டர் மிஷ்கின் சொல்கிறார்.

பிசாசு-2 படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் நேர்த்தியான தேர்ந்த இசை. படத்தின் கதையை உருவாக்கியபோது, உணர்ச்சி ததும்பும் கதையில், இசைக்கான முக்கியத்துவம் விட்டுப்போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இசையும், உணர்வுகளும் இரண்டற கலந்து கதை சொல்ல நினைத்தேன்.

இந்த படத்துக்காக கார்த்திக் ராஜாவுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரது இசை, சில படங்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. அவருடன் இசைப்பயணத்தில் இணைந்தது, சந்தோஷத்தை தருவதாக அமைந்து இருக்கிறது. அது, நெகிழ்வான-மகிழ்வான தருணங்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய, படத்தின் ஒவ்வொரு நொடியையும் வெகு கவனமாக செதுக்கி இருக்கிறேன். தயாரிப்பாளர் டி.முருகானந்தத்துக்கு நன்றி.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்