சினிமா செய்திகள்

லேடி கெட்டப் போடும் கவின் - வீடியோ வைரல்

கவினுக்கு லேடி கெட்டப் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், ஸ்டார் திரைப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்தது.

சமீபத்தில் இப்படத்தின் மெலோடி பாடல் வெளியானது. இந்த பாடலில் கவின் லேடி கெட்டப்பில் நடனமாடி இருப்பார். இதனால் இப்பாடல் வைரலானது.

இந்நிலையில், கவினுக்கு லேடி கெட்டப் போடும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், பிரசாந்த், விக்ரம், விஷால் உள்ளிட்டோரும் படத்தில் லேடி கெட்டப் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து