சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் 'டாடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவின் நடித்துள்ள ‘டாடா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

'பிக்பாஸ்' புகழ் நடிகர் கவின் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் 'டாடா'. இந்த படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நீறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'டாடா' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, வரும் பிப்ரவரி 10-ந்தேதி 'டாடா' படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளது.

February 10 முதல் :) #Dada @OlympiaMovies @RedGiantMovies_ @thinkmusicindia pic.twitter.com/ypM3eMU4tx

Kavin (@Kavin_m_0431) January 23, 2023 ">Also Read:

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து