சினிமா செய்திகள்

கவினின் “மாஸ்க்” படத்தின் ரிலீஸ் அப்டேட்

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நாளை வெளியிடுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கிஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் கண்ணுமுழி பாடல் வெளியாகி வைரலானது.

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மதியம் 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து