சினிமா செய்திகள்

கீர்த்தி சனோனின் கசப்பான அனுபவம்..!

தினத்தந்தி

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சனோன், ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை வேடத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். 'மிமி' படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தனது கசப்பான அனுபவங்களை கீர்த்தி சனோன் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "சினிமாவுக்கு வந்த புதிதில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டேன். சினிமாவில் வாய்ப்புதேடுவது, மாடலிங் செய்வது என்று இருந்தேன். மனிதர்களை பற்றி தெரியவில்லை. அணிவகுப்பு நிகழ்ச்சியொன்றில் ஹை ஹீல்ஸ் போட்டு நடந்தேன். அப்போது எனது செருப்பு புல்லுக்குள் புதைந்து மிகவும் கஷ்டப்பட்டேன். உடனே நடன இயக்குனர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். எல்லோரது முன்னிலையிலும் என்னை கேவலமாக திட்டினார். எனக்கு அழுகை வந்து விட்டது. ஆனாலும் பயந்து பின்வாங்கவில்லை. என்னிடம் மோசமாக நடந்து கொண்ட நடன இயக்குனருடன் பிறகு சேர்ந்து பணியாற்றவில்லை'' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்