சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரகு தாத்தா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘ரகு தாத்தா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அருகே வா’ என்ற பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், 'ரகு தாத்தா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

View this post on Instagram

'ரகு தாத்தா' படத்தின் இடம்பெற்றுள்ள 'அருகே வா' என்ற பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை எழுதி பாடியுள்ளார் ஷான் ரோல்டன். இது ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து