2019ம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்து இருந்தார் . இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
‘யூத்’ படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில், ‘யூத்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இப்பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.