கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் பசுபதி, மனோபாலா, பூச்சி முருகன், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன், ஜூனியர் பாலையா, அஜய்ரத்னம், நளினி, கோவை சரளா, குட்டி பத்மினி, லலிதகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் செயற்குழு கூட்டத்தில் கேரளாவில் பெய்து வரும் மழை வெள்ள இயற்கை சீற்றத்தால் பேரழிவுவை சந்தித்து வரும் கேரள மக்களுக்கு உதவ நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.