பெங்களூரு,
யாஷ் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபீசில் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து வரும் நிலையில், வரும் வார இறுதியில் படத்தின் வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.