மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், நேற்றோடு கியாரா அத்வானி சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றன. இதனை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்தான வீடியோவை நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் நடிகை உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவுடன் பகிர்ந்த பதிவில்,
10 வருடங்கள் ஆகிறது, ஆனால் நேற்றுதான் வந்ததுபோல உள்ளது… குடும்பத்திற்காக வாழ துடிக்கும் பெண்ணாகதான் இன்னும் இருக்கிறேன்... நீங்களும் என் குடும்பமாகிவிட்டதால் என் குடும்பம் இப்போது பெரிதாகி விட்டது. எனது இணை- நடிகர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள், எனது குடும்பத்தினர், எனது ரசிகர்கள் மற்றும் இந்தக் கனவை நனவாக்கிய உங்கள் ஒவ்வொருவரின் அன்புக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி, இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது நடிகை கியாரா அத்வானி சங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஜோடியாக கேம் ஜேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
View this post on Instagram