சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தில் கியாரா அத்வானி?

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தில் கியாரா அத்வானி நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தின் பிளாஷ் பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்து சந்திரமுகியை கொலை செய்வது போன்றும் சந்திரமுகி ஆவி ஜோதிகா உடலில் புகுந்து பழிவாங்க துடிப்பது போன்றும் திரைக்கதை இருந்தது.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும் வேட்டையன் மன்னனாக லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்து இருந்தார். இதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இதனை அவர் மறுத்தார். பின்னர் சிம்ரன் பெயர் அடிபட்டது. தற்போது பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது. கியாரா அத்வானி காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்காக லாரன்ஸ் இயக்கிய லட்சுமி பாம் படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் சந்தரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து