77-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ந்தேதி தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 16 நாட்கள் நடக்கிறது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச அளவிலான பல படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா உள்பட பலர் விழாவில் பங்கேற்றுள்ளனர். ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் கையில் கட்டுடன் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
View this post on Instagram
கேன்ஸ் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கியாரா அத்வானி அளித்துள்ள பேட்டியில் என் சினிமா வாழ்க்கையில் இது ஒரு வரலாறாக இருக்க போகிறது. விழாவில் பங்கேற்று இருப்பது எனக்கு சிறந்த அனுபவம் என்று கூறியுள்ளார்.