சினிமா செய்திகள்

’தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு திரைகள் கிடைப்பதில்லை’ - பிரபல நடிகர்

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை உதாரணமாகக் அவர் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல, தெலுங்குப் படங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை என்று தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் கூறினார்.

தெலுங்கு படங்களுக்கு தமிழ்நாட்டில் திரையரங்குகள் வழங்கப்படுவது எளிதில்லை எனவும் ஆனால், தமிழ் படங்களுக்கு நாம் முதலிடம் அளிப்பதாகவும் கூறினார். அதற்கு கிரண், பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தை உதாரணமாகக் கூறினார்.

கிரண் அப்பாவரம் நடித்துள்ள கே ராம்ப் படம் வருகிற 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.. அதற்கு ஒரு நாள் முன்னதாக டியூட் வெளியாக உள்ளது. டியூட் படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு மாநிலங்களில் அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்