சினிமா செய்திகள்

முத்த காட்சிகளை கண்டு இன்றைய ரசிகர்கள் பரவசம் கொள்வதில்லை; நடிகர் இம்ரான் ஹஷ்மி

முத்த காட்சிகளை கண்டு இன்றைய ரசிகர்கள் பரவசம் கொள்வதில்லை என நடிகர் இம்ரான் ஹஷ்மி கூறியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தி திரைப்படங்களில் முத்த காட்சிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் இம்ரான் ஹஷ்மி. இவர் மர்டர், கேங்ஸ்டர், தி டர்டி பிக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்களில் முத்த காட்சிகள் அதிகம் இடம்பெறும். இதனால் சீரியல் கிஸ்சர் என்ற பட்டப்பெயரால் அறியப்பட்டவர்.

இந்த நிலையில் பீகார் டைரிஸ் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, முத்த காட்சிகளுக்கு என்று எப்பொழுதும் முக்கியத்துவமுண்டு. அதில் இருந்து விலகி இருக்கவே நான் முயற்சி செய்தேன்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் இதுபோன்ற காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்த எடுக்கப்படுவதுண்டு. அது அள்ளி தெளிக்கப்பட்ட காட்சிகளாக இருக்காது. அதன்பின்னர் தேவையற்ற காட்சிகளில் அது போன்று நடிக்காமல் நிறுத்தி கொண்டேன்.

ஆனால் ரசிகர்கள் வளர்ந்து விட்டனர். பக்குவம் பெற்றும் விட்டனர். முத்த காட்சிகளை கண்டு இன்றைய ரசிகர்கள் பரவசம் கொள்வதில்லை என கூறினார். முத்த காட்சிகள் இருக்கும் என்பதற்காக திரைப்படங்களை நான் தேர்வு செய்வதில்லை. கதை மற்றும் நடிக்க வேண்டிய வேடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே படத்தினை தேர்வு செய்வேன் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து