சினிமா செய்திகள்

'கொட்டுக்காளி' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி எனும் திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது. படத்தின் புரோமோசன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், சூரி நடித்த 'கொட்டுக்காளி' படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இத்திரைப்படம், வருகிற 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்