சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வந்த கே.ஆர்.விஜயா

தினத்தந்தி

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு 'மூத்தகுடி' என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரகாஷ் சந்திரா, நாயகியாக அனிவிஷா ஆகியோர் நடிக்கின்றனர். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கதாநாயகனாக வந்த தருண் கோபி வில்லனாக நடிக்கிறார்.

1970-களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. ரவி பார்கவன் டைரக்டு செய்கிறார். அவர் கூறும்போது, "மூத்த நடிகை கே.ஆர்.விஜயா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின்போது கே.ஆர்.விஜயா கேரவனே வேண்டாம், படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று சொன்னார். கேரவனுக்கு செல்லாமல் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில்தான் இருந்தார்.

எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். அவரை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். மூன்று கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்ட பொருட்களை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்'' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்