சினிமா செய்திகள்

குமரன் நடிக்கும் “குமாரசம்பவம்” படத்திற்கு “யு” சான்றிதழ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் நடிக்கும் ‘குமாரசம்பவம்’ படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

தினத்தந்தி

சென்னை,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக குமாரசம்பவம் படம் மூலம் அறிமுகமாகிறார். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒருபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார். இப்படத்தை வீனஸ் இன்பொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் சிங்கிளான விடியாத இரவொன்று. பாடல் சமீபத்தில் வெளியானது.

குமாரசம்பவம் திரைப்படம் வரும் 12 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் ஒரு பீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் குமாரசம்பவம் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை