சினிமா செய்திகள்

'லாபதா லேடீஸ்' கதை திருட்டு குற்றச்சாட்டு திரைக்கதை ஆசிரியர் மறுப்பு

'லாபதா லேடீஸ்' படம் அரேபிய குறும்படமான ‘புர்கா சிட்டி’ கதையைப் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தினத்தந்தி

மும்பை,

இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாச் மாதம் வெளியான 'லாபதா லேடீஸ்' திரைப்படம். ரசிகாகளிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை நடிகா அமீகான், இயக்குனர் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பாஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவாகள் நடித்துள்ளனா. இப்படம் 97-ஆவது ஆஸ்கா விருதுக்கு தேர்வாகி பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தப் படம் 2019-ல் வெளியான அரேபிய குறும்படமான 'புர்கா சிட்டி' கதையைப் போலவே இருப்பதால், படத்தின் கதை திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இதன் திரைக்கதை ஆசிரியர் பிப்லாப் கோஸ்வாமி மறுப்பு தெரிவிதுள்ளார்.

அதாவது, "இந்த கதை 100 சதவீதம் என்னுடையது. இதில் கதைத்திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. கதை திருட்டு என்று சொல்வது என்னுடைய உழைப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவையும் சிறுமைபடுத்தும் செயல் ஆகும். இந்தப் படத்தின் சுருக்கமான கதை மற்றும் முழுக்கதையின் மேலோட்டமான விவரிப்புடன் 'டூ பேட்ர்ஸ்' என்ற தலைப்பில் திரைக்கதை ஆசிரியர்கள் அசோசியேஷனில் கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்