சினிமா செய்திகள்

“லியோ” வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது.

தினத்தந்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி லியோ திரைப்படம் வெளியானது . இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

உலக அளவில் சுமார் ரூ.620 கோடிக்கும் மேல் வசூலித்த லியோ திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக உள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 வருடம் நிறைவடைந்துள்ளநிலையில், படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியான இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை