அவர் கூறியதாவது:-
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன முப்படை தளபதி, அவரின் மனைவி மற்றும் 11 பேர்களுக்காக வருந்துகிறேன்.
கொரோனாவுக்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், சமீபத்தில் வெளிவந்த சில படங்களை பார்த்தபோது, தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது வருத்தம் அளிக்கிறது. பொதுநல வழக்கு போடும் அளவுக்கு மன உளைச்சலாக இருக்கிறது.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.