ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினத்தந்தி
தமிழில் களவானி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மத யானை கூட்டம், யாமிருக்க பயமேன் ஆகியவை அவரது நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.