சினிமா செய்திகள்

பவிஷின் அடுத்த பட டைட்டிலை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்

இப்படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் துவங்கியது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு லவ் ஓ லவ் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்