சினிமா செய்திகள்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்... வீடியோ வைரல்

லிடியன் இசையமைத்த முதல் டியூன் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் மோகன்லால். இவர் ஜில்லா, இருவர், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன், லூசிபர் 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகராக திரையுலகில் கலக்கிய மோகன்லால் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். அதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் புத்தாண்டு தினத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். 'பாரோஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் லிஜொ புன்னோஸ் எழுதிய 'பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா'ஸ் டிரெசர்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட உள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டே வெளியான நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சி, கோவா பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூலம் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்காக லிடியன் இசையமைத்த முதல் டியூன் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்