சினிமா செய்திகள்

4 ஆண்டுகளை நிறைவு செய்த “மாநாடு”... வெங்கட் பிரபுவின் நெகிழ்ச்சி பதிவு

‘மாநாடு’ படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான டைம் லூப் பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். சோதனைமுறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.

நவீன வாழ்க்கை, காற்று மாசுபாடு;டெல்லியில் இதய நோய்களால் இறப்பு அதிகரிப்பு

மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது

மராட்டியம்: 400 மீட்டர் பயணிக்க அமெரிக்க சுற்றுலா பயணியிடம் ரூ. 18 ஆயிரம் வசூலித்த டாக்சி டிரைவர் கைது

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?