சினிமா செய்திகள்

மாவீரன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட வாய்ப்பிருப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவன உரிமையளர் கே.வி.அருண் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதங்களை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்