சினிமா செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ‘தி டார்க் நைட்’ ஜோடி

இருவரும் ‘தி பிரைட்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

வாஷிங்டன்,

ஹாலிவுட் நடிகை மேகி ஜில்லென்ஹால் மற்றும் நடிகர் கிரிஸ்டியன் பேல், ’தி டார்க் நைட்’ படத்திற்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளனர்.

இருவரும் ‘தி பிரைட்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படம், 2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ’தி லாஸ்ட் டாட்டர்’ படத்திற்குப் பிறகு மேகி ஜில்லென்ஹால் இயக்கும் இரண்டாவது படமாகும்.

இந்த படத்தில் கிரிஸ்டியன் பேல், பிராங்கன்ஸ்டைன் கதாபாத்திரத்தின் உருவாக்கமான “பிராங்க்” என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜெஸ்ஸி பக்லி ‘மன்ஸ்டர் பிரைட்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த படம் குறித்து பேசிய மேகி ஜில்லென்ஹால், ’தி டார்க் நைட்’ படத்தில் கிறிஸ்டியன் பேலுடன் நெருக்கமாக பணியாற்றியிருந்தாலும், இப்போது இயக்குநராக அவருடன் வேலை செய்த அனுபவம் முற்றிலும் புதியதாக இருந்ததாக கூறினார். இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT