சினிமா செய்திகள்

"மீண்டும் கல்லூரி நாட்களுக்கே போயிட்டேன்" - ’இதயம் முரளி' பட அனுபவத்தை பகிர்ந்த மாளவிகா மோகனன்

தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்', 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மும்பை,

'இதயம் முரளி' திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கல்லூரி

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், "'இதயம் முரளி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பாக அமைந்தது. படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது, மீண்டும் கல்லூரி நாட்களுக்கே திரும்பி சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ரசிகர் பட்டாளம்

மாளவிகா மோகனன், 2013-ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'பட்டம் போலே'மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்', 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

தற்போது அவர், கார்த்திக்கு ஜோடியாக உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.