சினிமா செய்திகள்

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

இயக்குனர் பாபியுடன் சிரஞ்சீவி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அடுத்ததாக அனில் ரவிபுடி இயக்கத்தில் நயன்தாராவுடன் மனசங்கர வரபிரசாத் காரு' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.

இதையடுத்து வால்டர் வீரய்யா' படத்தை இயக்கிய பாபியுடன் சிரஞ்சீவி மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே 64 வயதுடைய மோகன்லாலுக்கு 32 வயதான மாளவிகா மோகனன் நடித்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. தற்போது 70 வயதான சிரஞ்சீவியுடன் அவர் ஜோடி சேர இருப்பதால், என்ன ஆகப் போகிறதோ... என அவரது ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்