சினிமா செய்திகள்

120-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற மலையாள படம்

ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படம் வருகிற 21-ந் தேதி திரையிடப்பட உள்ளது.

தினத்தந்தி

டிரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் சான்ட்ரா டிசோசா ராணா தயாரித்து ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்'. இதில் வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம், இதுவரை பல்வேறு உலக நாடுகளில் திரையிடப்பட்டு 120-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த படம் வருகிற 21-ந் தேதி தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் திரையிடப்படுகிறது.

இதுகுறித்து படக்குழு கூறும்போது, கிறிஸ்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் இப்படம் ஆழ்ந்த ஆன்மிக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற கருத்துகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றனர்.

இந்த படம் 2023-ம் ஆண்டு கேரளாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி