சினிமா செய்திகள்

மலேசிய கார் பந்தயம் - 4வது இடம் பிடித்த அஜித் அணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்.

தினத்தந்தி

சென்னை,

மலேசியாவில் நேற்று நடைபெற்ற 24 ஹவர்ஸ் ஹ்ரிவெண்டிக் சீரிஸ் (24hrs creventic series) கார் பந்தய தொடரில் ஜிடி3(GT3) பிரிவில் அஜித்குமார் தலைமையிலான ரேஸிங் அணி 4வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

அஜித் குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பது தெரிந்த கதை. இது அஜித்குமாரின் 64-வது படமாகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்