சினிமா செய்திகள்

'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தில் இருந்து வடிவேலுவின் குரலில் முதல் பாடல் 'ராசா கண்ணு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 1-ந்தேதி(நாளை) சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'மாமன்னன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

#MAAMANNAN Audio Live Concert on June 1st at Nehru Stadium
@mari_selvaraj #Vadivelu @Udhaystalin @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia pic.twitter.com/bqMZ5vzMB9

A.R.Rahman (@arrahman) May 30, 2023 ">Also Read:

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை