சினிமா செய்திகள்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நயன்தாரா?

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

2001-ம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக களமிறங்கினார் கவுதம் வாசுதேவ் மேனன். அதை தொடர்ந்து, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணமாயிரம் என அடுத்தடுத்து இவரது படைப்பில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாஸ் ஹிட் கொடுத்தன. இப்படி பல வெற்றி படங்களை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் குணசித்ர வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார்.

தற்போது, இவர் இயக்க உள்ள படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவுகிறது. மேலும், இவருடன் இந்த படத்தில் மம்முட்டியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், இப்படம் தமிழில் உருவாகிறதா? அல்லது மலையாளத்தில் உருவாகிறதா? என்பது பற்றிய தகவலும் இல்லை.

நடிகை நயன்தாரா மற்றும் மம்முட்டி இருவரும் கடைசியாக இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'புதிய நியமம்' என்ற மலையாள படத்தில் நடித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்