சினிமா செய்திகள்

காரைக்குடியில் தொடங்கிய மம்மூட்டியின் புதிய பட படப்பிடிப்பு... வீடியோ வைரல்

வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

காரைக்குடி,

மம்மூட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

மம்மூட்டி

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சகதேவ் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பின் முதல் நாளில் எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகளின் பின்னணிக் காட்சிகள் (BTS) அடங்கிய வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

வீடியோ

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் நிதிஷ் சகதேவ் மம்மூட்டியுடன் இணைந்திருக்கிறார்.

SCROLL FOR NEXT