சினிமா செய்திகள்

மாநாடு திரைப்படம் வெற்றி - வீடியோ வெளியிட்டு சிம்பு நன்றி

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வீடியோ வெளியிட்டு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'மாநாடு'. 

இந்தப் படம் கடந்த நவம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம்லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படக்குழுவினரோடு இருக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 'அனைத்து அன்பிற்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை டைரக்டர் வெங்கட்பிரபுவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'அன்பான ரசிகர்களுக்கு, இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்