சினிமா செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக, லைகா நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்