சினிமா செய்திகள்

24 வருட திருமண வாழ்க்கை முடிவு - பிரபல ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை

சினிமா ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை மஞ்சு பிள்ளை 2000-ல் திருமணம் செய்தார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள நடிகை மஞ்சு பிள்ளை. இவர் தமிழில் பிரியதர்ஷன் இயக்கிய 'சினேகிதியே' மற்றும் கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

சினிமா ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை மஞ்சு பிள்ளை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனாலும் அதற்கு விளக்கம் சொல்லாமலேயே இருந்தனர். தற்போது விவாகரத்து செய்து பிரிந்து இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து சுஜித் வாசுதேவ் கூறும்போது, "நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து நாங்கள் நட்புறவுடன் இருப்போம்'' என்றார். இதன் மூலம் இவர்களது 24 வருட திருமண வாழ்க்கை முடிவடைந்துள்ளது.

சுஜித் வாசுதேவ் மலையாளத்தில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இவர் தமிழில் கமல்ஹாசனின் 'பாபநாசம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்