சென்னை,
மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி அடுத்ததாக மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணனின் படத்தில் நடிக்கிறார். பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளது.
இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கெனவே ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.