சினிமா செய்திகள்

கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஊக்கத்தொகை அளித்து பாராட்டிய மாரி செல்வராஜ்!

கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா கில்லியாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இந்த நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவுக்கு 'பைசன்' படக்குழு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இயக்குனர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகையாக வழங்கினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை